×

ஜோஷ் இங்லிஸ் அதிரடி சதம் ஆஸ்திரேலியா 208 ரன் குவிப்பு

விசாகப்பட்டினம்: இந்திய அணியுடனான முதல் டி20 போட்டியில், ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக 50 பந்தில் 110 ரன் விளாசினார். ஒய்எஸ்ஆர் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூரியகுமார் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.
ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட் இணைந்து ஆஸ்திரேலிய இன்னிங்சை தொடங்கினர். ஷார்ட் 13 ரன் எடுத்து ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து ஸ்மித்துடன் ஜோஷ் இங்லிஸ் ஜோடி சேர்ந்தார். ஸ்மித் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, அதிரடியில் இறங்கிய இங்லிஸ் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு இந்திய பந்துவீச்சை சிதறடித்தார். இங்லிஸ் 29 பந்தில் அரைசதம் அடிக்க, ஸ்மித் 40 பந்தில் 50 ரன்னை எட்டினார்.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்தனர். ஸ்மித் 52 ரன் எடுத்து (41 பந்து, 8 பவுண்டரி) ரன் அவுட்டானார். மிரட்டலாக விளையாடிய இங்லிஸ் 47 பந்தில் சதம் அடித்து அசத்தினார். அவர் 110 ரன் (50 பந்து, 11 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி பிரசித் கிருஷ்ணா வேகத்தில் ஜெய்ஸ்வால் வசம் பிடிபட்டார். ஆஸ்திரேலியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 7 ரன், டிம் டேவிட் 19 ரன்னுடன் (13 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் பிரசித், பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

 

The post ஜோஷ் இங்லிஸ் அதிரடி சதம் ஆஸ்திரேலியா 208 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Josh Inglis ,Australia ,Visakhapatnam ,India ,Josh Inglis… ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...